
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி ஆகிய இருவரும் 2004-ல் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளார்கள்.
கடந்த 2022 ஜனவரியில் இருவரும் பிரிந்து வாழ்வதாக அறிவித்தார்கள். 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த நிலையில் இருவரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து விவாகரத்து வழக்கு தொடர்பாக தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி ஆகிய இருவரும் 3 முறை விசாரணைக்கு அழைத்தும் நேரில் ஆஜராகாத நிலையில், கடந்த நவ. 21 அன்று இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள்.
அப்போது பரஸ்பரம் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக இருவரும் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் வரும் நவ. 27 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்பநல நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.