விவாகரத்து வழக்கு: நடிகர் தனுஷ் - இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி நேரில் ஆஜராக உத்தரவு

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி ஆகிய இருவரும் 2004-ல் காதல் திருமணம் செய்துகொண்டார்கள்.
நடிகர் தனுஷ் - இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி நேரில் ஆஜராக உத்தரவு
நடிகர் தனுஷ் - இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி நேரில் ஆஜராக உத்தரவு
1 min read

நடிகர் தனுஷ் - இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி விவாகரத்து வழக்கு தொடர்பாக இருவரும் அக்டோபர் 7 அன்று நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி ஆகிய இருவரும் 2004-ல் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளார்கள்.

கடந்த 2022 ஜனவரியில் இருவரும் பிரிந்து வாழ்வதாக அறிவித்தார்கள். 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த நிலையில் இருவரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி கடந்த வாரம் மனுத்தாக்கல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து விவாகரத்து வழக்கு தொடர்பாக தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி ஆகிய இருவரும் அக்டோபர் 7 அன்று நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in