
நடிகர் தனுஷ் - இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி விவாகரத்து வழக்கில் நவ. 27-ல் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி ஆகிய இருவரும் 2004-ல் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளார்கள்.
கடந்த 2022 ஜனவரியில் இருவரும் பிரிந்து வாழ்வதாக அறிவித்தார்கள். 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த நிலையில் இருவரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து விவாகரத்து வழக்கு தொடர்பாக தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி ஆகிய இருவரும் கடந்த 3 முறை விசாரணைக்கு அழைத்தும் நேரில் ஆஜராகாத நிலையில், இன்று இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளனர்.
இருவரிடமும் நீதிமன்ற அறைக்குள் வைத்து ரகசியமாக விசாரணை நடத்தியதாகவும், இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் வரும் நவ. 27 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.