தேவரா படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் போன்றோர் நடிப்பில் கடந்த செப். 27 அன்று வெளியான படம் ‘தேவரா’.
இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே அதிகமான வசூலை குவித்தது. அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் 3-வது நாள் முடிவில் உலகளவில் ரூ. 304 கோடி வசூல் செய்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, தேவரா வட இந்தியாவிலும் அதிகமான வசூலைப் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவரா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் வருகிற நவம்பர் 8 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. விரைவில் ஹிந்தி மொழியிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.