அருள்நிதியின் டிமான்ட்டி காலனி 2: வெளியீட்டு தேதி அறிவிப்பு!

இதே தினத்தில் தான் விக்ரமின் தங்கலான் படமும், பிரசாந்தின் அந்தகன் படமும் வெளியாக உள்ளது.
டிமான்ட்டி காலனி 2
டிமான்ட்டி காலனி 2@arulnithitamil
1 min read

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் டிமான்ட்டி காலனி 2 படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் டிமான்ட்டி காலனி. கடந்த 2015-ல் வெளியான இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். இப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர் போன்றோர் நடித்துள்ளனர். இசை - சாம் சி.எஸ்.

இந்நிலையில் டிமான்ட்டி காலனி 2 படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே தினத்தில் தான் விக்ரமின் தங்கலான் படமும், பிரசாந்தின் அந்தகன் படமும் வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in