டெல்லி கணேஷின் உடல் தகனம்!

இந்திய விமானப்படையின் ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் சார்பில் டெல்லி கணேஷின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
டெல்லி கணேஷின் உடல் தகனம்!
1 min read

பிரபல தமிழ் குணச்சித்திர நடிகரான டெல்லி கணேஷின் உடல் இன்று (நவ.11) காலை தகனம் செய்யப்பட்டது.

தமிழ்த் திரையுலத்தின் மகத்தான குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷ், வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கடந்த நவ.9-ல் அவரது ராமாபுரம் இல்லத்தில் காலமானார். இதனைத் தொடர்ந்து நேற்று (நவ.10) டெல்லி கணேஷின் உடலுக்குத் தமிழ் திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

1964 முதல் 1974 வரை இந்திய விமானப்படையில் பணியாற்றியுள்ளார் டெல்லி கணேஷ். இதனால் இன்று (நவ.11) காலை டெல்லி கணேஷின் உடல் மீது இந்திய விமானப்படையின் கொடி போர்த்தி மரியாதை செய்தனர் விமானப்படை வீரர்கள்.

அத்துடன் இந்திய விமானப்படையின் ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் சார்பில் டெல்லி கணேஷின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லி கணேஷின் உடல் ராமாபுரம் இல்லத்தில் இருந்து நெசப்பாக்கம் மின் மயானத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

நண்பர்கள், உறவினர்கள், தமிழ் திரை உலகினர் எனப் பலரும் கண்ணீர் மல்க டெல்லி கணேஷின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். இதை அடுத்து நெசப்பாக்கம் மின் மயானத்தில் வைத்து இறுதி சடங்குகள் நிறைவுற்ற பிறகு, காலை 11.30 மணி அளவில் டெல்லி கணேஷின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in