பெங்களூரு சிறையில் நடிகர் தர்ஷனுக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ரேணுகா சுவாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கௌடா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் தர்ஷன் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிறை வளாகத்திற்குள் காபி மற்றும் சிகரெட்டுடன் அமர்ந்திருக்கும் படமும், வீடியோ கால் பேசுவது போன்ற படமும் வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து பெங்களூரு சிறையில் நடிகர் தர்ஷனுக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்பட்டதாகக் கூறி 7 சிறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதன் பிறகு நடிகர் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் தர்ஷன் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 நபர்களில் 14 பேர் தற்போது வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பவித்ரா கௌவுடா உட்பட மூன்று மட்டுமே பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர்.