பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்

வேட்டையாடு விளையாடு படத்தில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்
நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்
1 min read

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48.

‘காக்க காக்க’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் டேனியல் பாலாஜி. இதன் பிறகு ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதைத் தொடர்ந்து பொல்லாதவன், வை ராஜா வை, பைரவா, வட சென்னை, பிகில் உட்பட பல படங்களில் நடித்தார். மேலும் மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் நடித்தார்.

இந்நிலையில் நேற்றிரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் உடனடியாகத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். 48 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு டேனியல் பாலாஜி உயிரிழந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in