நடிகர் ரஜினிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த ஹர்பஜன் சிங்

நடிகர் ரஜினிக்கு வாழ்த்து
நடிகர் ரஜினிக்கு வாழ்த்து@harbhajan_singh
1 min read

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினி அவர்கள் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு பல சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் என சமூக வலைத்தளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அனியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிகர் ரஜினியின் முகத்தை தனது நெஞ்சில் பச்சை குத்திருக்கும் ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், நடிகர் ரஜினி உடன் தான் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ஹர்பஜன் சிங் குறிப்பிட்டுள்ளதாவது,

அன்பு தலைவா!

நீங்கள் முகநரையை மை கொண்டு மறைக்காதவர்.,அதே போல் உங்கள் மன அறையை பொய் கொண்டு நிறைக்காதவவர்.

செப்பு கலந்து இருக்கும் தங்கம் அல்ல! மாசற்ற மாணிக்கம்!

பிளாக்பஸ்டர் பிறந்தநாள் வாழ்த்துகள்.அலப்பறை

கிளப்புங்க சார்

1950 ஆம் ஆண்டு பிறந்த நடிகர் ரஜினி அவர்கள் 1975 முதல் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இதுவரை 169 திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் ரஜினி என்றென்றும் மக்கள் மனதில் சூப்பர் ஸ்டாராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது. தற்போது தலைப்பு அறிவிக்காத தனது 170-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் அவர்கள் இயக்கி வருகிறார்.    

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in