
விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அனிருத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு மொழிப் படங்களுக்கும் இசையமைத்து அசத்திவரும் அனிருத், தனது அடுத்தப் படங்கள் குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அமேசான் மியூஸிக்குக்கு அளித்த பேட்டியில், “விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று நினைக்கிறேன். அது தவிர கூலி, ஷாருக் கானின் ஒரு படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இது குறித்து பேசும்போது லேசாக தலைவலி ஏற்படுகிறது. எனவே மற்ற படங்களைப் பற்றி பேச வேண்டாம் என நினைக்கிறேன். ஏனென்றால் அது ஒரு விதமான அழுத்தத்தை ஏற்படுத்தும். அடுத்த 10 மாதங்களில் 50 பாடல்களை நான் கொடுக்க வேண்டும். அதற்காக, எனக்கு நானே வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்” என்று அனிருத் பேசியுள்ளார்.
அஜித்தின் குட் பேட் அக்லி படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், விடாமுயற்சி படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அனிருத் தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.