தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நடிகர் விஜய் மீது புகார்

“வாக்களிக்க காத்திருந்தவர்களை அவமதித்து வரிசையில் நின்று வாக்களிக்காமல் காவல்துறையினர் உதவியோடு வாக்கை செலுத்தி உள்ளார்”.
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நடிகர் விஜய் மீது புகார்
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நடிகர் விஜய் மீது சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19 அன்று ஒரேகட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என பலரும் வாக்களித்தனர்.

சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது வாக்கை பதிவு செய்தார். விஜய் வருகையால், வாக்குச்சாவடியில் கூட்டம் அலைமோதியது. பின்னர், காவல் துறையினரால் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்ட விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார்.

இந்நிலையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நடிகர் விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் செல்வம் என்பவர், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 200-க்கும் மேற்பட்ட நபர்களுடன் தேர்தல் விதிமுறைகளை மீறி விஜய் வாக்குச்சாவடிக்குள் சென்றதாகவும், வாக்குச்சாவடியில் வாக்களிக்க காத்திருந்தவர்களை அவமதித்து வரிசையில் நின்று வாக்களிக்காமல் காவல்துறையினர் உதவியோடு வாக்கை செலுத்தி உள்ளார் என்றும் புகார் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in