நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்
நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

தமிழ், தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராக புகழ்பெற்றவர் விஸ்வேஷ்வர ராவ்.

இவர் இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான ‘பிதாமகன்’ படத்தில் லைலாவுக்கு அப்பாவாக நடித்தார். பல நகைச்சுவை காட்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

தனது 6 வயதில் நடிக்க ஆரம்பித்த விஸ்வேஷ்வர ராவ், இதுவரை 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். விஸ்வேஷ்வர ராவின் உடல் சென்னை சிறுசேரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in