சின்னத்திரை நடிகையைக் கரம்பிடித்த ரெடின் கிங்ஸ்லி

ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா திருமணம்
ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா திருமணம்@Sathish krishnan
1 min read

பிரபல நகைச்சுவை நடிகரான ரெடின் கிங்ஸ்லிக்கும் சின்னத்திரை நடிகையான சங்கீதாவிற்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

தமிழகத்தில் பிரபல நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர் ரெடின் கிங்ஸ்லி. 2018-ல் நெல்சன் இயக்கத்தில் வெளியான ’கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் அறிமுகமான கிங்ஸ்லி அதன்பிறகு, சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’, ரஜினி நடித்த ’அண்ணாத்த’, ’ஜெயிலர்’, விஜய் நடித்த ’பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பரவலாகக் கவனம் பெற்றார். தனித்துவமான உடல்மொழியும் உச்சரிப்பும் ரெடின் கிங்ஸ்லியின் புகழ் வீச்சுக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.

இந்நிலையில், சின்னத்திரை நடிகையான சங்கீதாவைத் திருமணம் செய்துள்ளார் கிங்ஸ்லி. மைசூரில் உள்ள கோவிலில் இவர்களது திருமணம் நேற்று எளிமையான முறையில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டார்கள். விரைவில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிங்ஸ்லி - சங்கீதா திருமணப் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவிய நிலையில் அது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், நடன இயக்குனரும் நடிகரும் கிங்ஸ்லியின் நண்பருமான சதீஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா திருமணம் நடைபெற்றதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து இந்தத் தம்பதிக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகள் குவித்து வருகின்றன.  

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in