டெல்லி கணேஷ் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் பல நகைச்சுவை, குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவரான அவரது மறைவு திரையுலகிற்குப் பேரிழப்பாகும்.
டெல்லி கணேஷ் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
1 min read

டெல்லி கணேஷின் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் மகத்தான குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷ், உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 80.

டெல்லி கணேஷின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் எக்ஸ் பதிவு

மூத்த திரைக்கலைஞர் 'டெல்லி' கணேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து, தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாகப் பதித்தவர் டெல்லி கணேஷ்.

400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவரது நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் மக்களால் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் அளவுக்குச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக அவர் திகழ்ந்தார்.

வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் அவர் பல தொடர்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார்.

முத்தமிழறிஞர் கலைஞரின் எழுத்தில் உருவான இளைஞன் படத்திலும் டெல்லி கணேஷ் நடித்திருந்தார்.

தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் பல நகைச்சுவை, குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவரான அவரது மறைவு திரையுலகிற்குப் பேரிழப்பாகும்.

அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in