நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்தவர் சகுந்தலா. 1970-ல் ஜெய்சங்கர் நடித்த ‘சிஐடி சங்கர்’ படத்தில் நடித்த பிறகு இவரது பெயர் சிஐடி சகுந்தலா என பிரபலமானது.
எம்ஜிஆர் நடித்த ‘இதயக்கனி’ படத்தில் இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அவரது வாழ்க்கையில் இப்படம் மிகவும் முக்கியமான படமாகவும் அமைந்தது.
இதைத் தொடர்ந்து ‘படிக்காத மேதை ’, ‘கை கொடுத்த தெய்வம்’, ‘திருடன்’, ‘வசந்த மாளிகை ’, ‘நீதி’, ‘பாரத விலாஸ்’, ‘ராஜராஜ சோழன்’ உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.