டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்திக்கும், வர்ஷிணி என்பருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன் போன்ற பலர் நடிப்பில் 2022 மே மாதத்தில் வெளியான படம் டான்.
இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. சிபி சக்ரவர்த்தி அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
டான் படத்துக்குப் பிறகு அவரின் அடுத்தப் படம் குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் சிபி சக்ரவர்த்திக்கும், வர்ஷிணி என்பருக்கும் ஈரோட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதில் அட்லி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா, இயக்குநர் ரவிகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக, செப். 1 அன்று சிபி சக்ரவர்த்தியால் பேச்சுலர் பார்ட்டி நடத்தப்பட்டது. இதில் சிவகார்த்திகேயன், பாலசரவணன் உட்பட பலரும் பங்கேற்றனர்.