பாலியல் புகார்: நடன இயக்குநர் ஜானி மீது வழக்குப்பதிவு

ஜனசேனா கட்சியிலிருந்து ஜானி நீக்கப்பட்டார்.
பாலியல் புகார்: நடன இயக்குநர் ஜானி மீது வழக்குப்பதிவு
1 min read

பெண் அளித்த பாலியல் புகாரின் பேரில் நடன இயக்குநர் ஜானி மீது தெலங்கானாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

21 வயதுடைய இளம்பெண், ஜானி மீது புகார் அளித்துள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையிடம் அளித்த புகாரின் பெயரில், இளம்பெண் கடந்த சில மாதங்களாக ஜானியுடன் இணைந்து பணிபுரிந்து வந்துள்ளார்.

சென்னை, மும்பை மற்றும் ஹைதராபாத் என வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்புகளின்போது ஜானி பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். நர்சிங்கியிலுள்ள தனது இல்லத்திலும் வைத்து பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் புகாரளித்துள்ளார்.

இவருடையப் புகாரின்பேரில் ராய்துர்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இந்த வழக்கானது கூடுதல் விசாரணைக்காக நர்சிங்கி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அந்தப் பெண் நர்சிங்கியைச் சேர்ந்தவர் என்பதால் வழக்கு அங்கு மாற்றப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, ஜனசேனா கட்சியிலிருந்து ஜானி நீக்கப்பட்டார்.

திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா பாடலுக்காக ஜானிக்கு அண்மையில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in