
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிச. 12 முதல் 19 வரை நடைபெறவுள்ளது.
இதில், 25 தமிழ்ப் படங்களும், பல்வேறு இந்திய மொழிகளிலிருந்து 16 படங்கள் இந்தியன் பனோரமா பிரிவிலும், உலக சினிமா போட்டிப் பிரிவில் 12 படங்களும் திரையிடப்பட இருக்கின்றன.
தமிழ்ப் பிரிவில் அமரன், போட், கொட்டுக்காளி, கோழிப் பண்ணை செல்லதுரை, லப்பர் பந்து, மகாராஜா, மெய்யழகன், நந்தன், தங்கலான், வாழை, வேட்டையன் பார்க்கிங், டீன்ஸ் உள்பட 25 படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியன் பனோரமா பிரிவில் ஆடுஜீவிதம், ஏஆர்எம் உள்பட 7 மலையாளப் படங்கள் இடம்பெற்றுளன. இப்பிரிவுக்கு தேர்வான ஒரே தமிழ்ப் படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’.
உலக சினிமா போட்டிப் பிரிவில் கிணறு என்ற தமிழ்ப் படம் இடம்பெற்றுள்ளது.