நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது காவல் நிலையத்தில் புகார்

கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சரண்யா பொன்வண்ணன் மீது வழக்குப் பதிவு
சரண்யா பொன்வண்ணன் மீது வழக்குப் பதிவு
1 min read

கார் நிறுத்துவது தொடர்பான வாக்குவாதத்தில் சரண்யா பொன்வண்ணன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகை சரண்யா சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவி என்ற பெண் தனது வீட்டின் கதவை திறக்கும் போது, அது சரண்யாவின் காரை உரசியதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி, இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளையும் சமர்பித்து சரண்யா மீது ஸ்ரீதேவி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in