
மஞ்ஞும்மல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிப். 22 அன்று மலையாளத்தில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படம், உலகம் முழுவதும் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து, இந்த இலக்கை எட்டிய முதல் மலையாளப் படம் எனும் பெருமையை பெற்றது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாகக் கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக கேரள மாநிலம் அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் மோசடி வழக்கு தொடர்ந்தார்.
இது குறித்த மனுவில் “மஞ்ஞும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ. 7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு பணம் தரவில்லை” என கூறப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது கேரளா காவல் துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிராஜ் என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்ய எர்ணாகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து மரடா காவல் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.