சிறந்த அயல் மொழிப் படமாக கேப்டன் மில்லர் தேர்வு!

இப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பற்றி தனுஷ் பேசக்கூடிய வசனங்கள் விவாதப்பொருளாக மாறியது.
சர்வதேச விருது வென்ற கேப்டன் மில்லர்!
சர்வதேச விருது வென்ற கேப்டன் மில்லர்!

லண்டனில் நடைபெற்ற தேசிய பட விழாவில் சிறந்த அயல் மொழிப் படமாக தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஜனவரி மாதத்தில் வெளிவந்த படம் கேப்டன் மில்லர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பற்றி தனுஷ் பேசக்கூடிய வசனங்களும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு விவாதப்பொருளாக மாறியது.

இந்நிலையில், நேற்று லண்டனில் நடைபெற்ற பிரிட்டன் தேசியப் பட விழாவில், சிறந்த அயல் மொழிப் படம் என்ற விருது கேப்டன் மில்லர் படத்துக்குக் கிடைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து கேப்டன் மில்லர் படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in