கான் பட விழா: சிறந்த நடிகை விருது பெற்ற இந்திய நடிகை

கடந்த 77 வருடங்களாக நடைபெற்று வரும் கான் பட விழாவில் இந்திய நடிகை ஒருவர் சிறந்த நடிகைக்கான விருது பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.
கான் பட விழா
கான் பட விழா

கான் பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை இந்திய நடிகை அனசுயா செங்குப்தா வென்று சாதனை படைத்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் கான் நகரில் ஆண்டுதோறும் கான் பட விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘தி ஷேம்லெஸ்’ படத்தில் நடித்ததற்காக இந்திய நடிகை அனசுயா செங்குப்தாவுக்கு இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான கான் விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 77 வருடங்களாக நடைபெற்று வரும் கான் பட விழாவில் இந்திய நடிகை ஒருவர் சிறந்த நடிகைக்கான விருது பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.

மேலும், ‘சன்ஃப்ளவர்ஸ் வேர் தி ஃபர்ஸ்ட் ஒன்ஸ் டு நோ’ (Sunflowers were the first ones to know) என்ற இந்திய குறும்படம் லா சினிஃப் பிரிவில் முதல் பரிசு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்தியாவைச் சேர்ந்த இயக்குநர் இயக்கிய, ‘பன்னீஹீட்’ (Bunnyhood) என்ற குறும்படம் 3-வது இடத்தைப் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in