கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

முதல் டெஸ்ட் விளையாடி 150 ஆண்டுகள்: மெல்போர்னில் சிறப்பு டெஸ்ட்!

முதல் டெஸ்டின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக 1977-ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையே மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
Published on

முதல் டெஸ்ட் ஆட்டம் நடைபெற்று 150 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக, 2027-ல் மெல்போர்னில் சிறப்பு டெஸ்டை நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

சர்வதேச அளவில் முதல் டெஸ்ட் ஆட்டம் 1877-ல் நடைபெற்றது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான இந்த ஆட்டம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. மார்ச் 15 முதல் மார்ச் 19 வரை காலவரையறை இல்லாமல் தலா ஒரு இன்னிங்ஸாக மட்டுமே நடைபெற்ற இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் டெஸ்ட் நடைபெற்று 150 ஆனதைக் கொண்டாடும் விதமாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையே 2027-ல் அதே மெல்போர்ன் மைதானத்தில் சிறப்பு டெஸ்ட் ஆட்டத்தை நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

ஆண்டுதோறும் டிசம்பர் 26-ல் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்டையும் 2030-31 வரை அடுத்த 7 ஆண்டுகளுக்கு மெல்போர்னில் நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

முன்னதாக, முதல் டெஸ்டின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக 1977-ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையே மெல்போர்னில் சிறப்பு டெஸ்ட் ஆட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய அணி அதே 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

logo
Kizhakku News
kizhakkunews.in