சிவகார்த்திகேயன் - முருகதாஸ் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்!
சிவகார்த்திகேயன் - முருகதாஸ் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்!@bijumenonofficial

சிவகார்த்திகேயன் - முருகதாஸ் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்!

மலையாளத்தில் வெளிவந்த அய்யப்பனும் கோஷியும் படத்திற்காக தேசிய விருதை வென்றார் பிஜூ மேனன்.
Published on

பிரபல மலையாள நடிகர் பிஜூ மேனன், 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார்.

அயலான் படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன், அமரன் மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிஜூ மேனன் சிவகார்த்திகேயன் - முருகதாஸ் படத்தில் நடிக்கவுள்ளார்.

மலையாளத்தில் வெளிவந்த அய்யப்பனும் கோஷியும் படத்திற்காக தேசிய விருதை வென்றார் பிஜூ மேனன். இப்படத்திற்கு பிறகு இவருக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் உட்பட மற்ற மொழி ரசிகர்களும் அதிகரித்தனர்.

தமிழில் மஜா, தம்பி, பழனி போன்ற படங்களில் நடித்த பிஜூ மேனன் கடைசியாக 2010-ல் போர்க்களம் படத்தில் நடித்தார். இந்நிலையில் இவர் 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார்.

இது குறித்து அவர் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், “ஆம், இப்படத்தில் நடிக்கவுள்ளேன். இது ஒரு பெரிய கதை. இப்படத்தில் நடிக்க ஒரு வருடத்திற்கு தேதி கொடுத்துள்ளேன். இப்போதைக்கு வேறு எதுவும் என்னால் சொல்ல முடியாது. ஆனால், படம் முழுக்க என்னுடைய கதாபாத்திரம் இருக்கும்” என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in