யூடியூப் சேனல் ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிளாக் ஷீப் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார் பிஜிலி ரமேஷ். இதைத் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வர ஆரம்பித்தது.
நட்பே துணை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஆடை, காத்துவாக்குல ரெண்டு காதல், பொன்மகள் வந்தாள், கோமாளி போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்நிலையில் அவருக்கு கல்லீரல் பிரச்னை இருந்ததால் கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார்.
இதைத் தொடர்ந்து பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.