விஜயின் பிகில் கதை, தான் எழுதியது என 2019-ல் அம்ஜத் மீரான் என்பவர் தொடர்ந்த வழக்கில் இயக்குநர் அட்லி, ஏஜிஎஸ் நிறுவனம் பதலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா போன்ற பலர் நடிப்பில் 2019-ல் வெளியான படம் ‘பிகில்’. இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. ஆனால் இப்படத்துக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் வந்து கொண்டே இருந்தது. இயக்குநர் அட்லி மீது கதை திருட்டுப் புகார்களும் அதிகமாக எழுந்தது.
இந்நிலையில் பிகில் கதை, தான் எழுதியது என 2019-ல் அம்ஜத் மீரான் என்பவர் வழக்கு தொடர்ந்தார். மேலும், கூடுதல் ஆதாரங்களைத் தாக்கல் செய்ய அனுமதி கோரி 2023-ல் 3 மனுக்களை தாக்கல் செய்தார் அம்ஜத் மீரான்.
இதைத் தொடர்ந்து அந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இயக்குநர் அட்லி மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.