பிக் பாஸ் 8: முதல் வாரத்தில் வெளியேறிய ரவிந்தர்!

முதல் வாரத்துக்கான நாமினேஷன் பட்டியலில் ஜாக்குலின், அருண், செளந்தர்யா, ரஞ்சித், முத்துக்குமரன் மற்றும் ரவிந்தர் ஆகியோர் இடம்பெற்றனர்.
பிக் பாஸ் 8: முதல் வாரத்தில் வெளியேறிய ரவிந்தர்!
1 min read

பிக் பாஸ் 8 போட்டியின் முதல் வாரத்தில் தயாரிப்பாளர் ஃபேட்மேன் ரவிந்தர் வெளியேறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ், 18 போட்டியாளர்களுடன் அக். 6 அன்று தொடங்கியது. இதுவரை 7 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த வருடம் அவர் விலகியதையடுத்து, விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

இம்முறை முதல் 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்கிற ஒரு புது விதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் முதல் ஆளாக வெளியேற்றப்பட்ட இளம் நடிகை சாச்சனா, சமீபத்தில் மீண்டும் பிக் பாஸ் இல்லத்துக்குள் வந்தார்.

இந்நிலையில் முதல் வாரத்துக்கான நாமினேஷன் பட்டியலில் ஜாக்குலின், அருண், செளந்தர்யா, ரஞ்சித், முத்துக்குமரன் மற்றும் ரவிந்தர் ஆகியோர் இடம்பெற்றனர்.

இதில் வாக்குகள் அடிப்படையில் தயாரிப்பாளர் ஃபேட்மேன் ரவிந்தர் வெளியேறியுள்ளார். பிக் பாஸ் இல்லத்தில் இருந்து வெளியே வந்த ரவிந்தர் சக போட்டியாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

முன்னதாக, பிக் பாஸ் இல்லத்துக்குள் முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்தார் ரவிந்தர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in