பிக் பாஸ் ஜூலிக்கு நிச்சயதார்த்தம்: மணமகன் சஸ்பென்ஸ் | Bigg Boss Julie |

நாங்கள் எங்களுக்கென அதிகாரப்பூர்வ சரணாலயம் ஒன்றைக் கட்டத் தொடங்கியிருக்கிறோம்....
பிக் பாஸ் ஜூலிக்கு நிச்சயதார்த்தம்: மணமகன் சஸ்பென்ஸ்
பிக் பாஸ் ஜூலிக்கு நிச்சயதார்த்தம்: மணமகன் சஸ்பென்ஸ்https://www.instagram.com/mariajuliana_official/
1 min read

பிக் பாஸ் பிரபலம் ஜூலிக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில் அவர் வெளியிட்டுள்ள படங்கள் பேசுபொருளாகியுள்ளன.

சென்னையில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது கவனம் பெற்ற ஜூலி, பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் புகழ்பெற்றார். அதன்பின் சில படங்களில் அவர் நடித்திருந்தாலும், திரைத்துறையில் அவருக்கு அதிக வரவேற்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில் அவ்வப்போது சமூக ஊடகப் பக்கத்தில் தனது படங்களை வெளியிட்டு வந்தார் ஜூலி.

இந்நிலையில், ஜூலி தான் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த படங்களை பகிர்ந்துள்ளார். ஜூலி காதலித்து வந்த அவரது காதலருடன் தான் இப்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. ஆனால், அவர் யார் என்ற விவரங்களை ஜூலி இன்னும் வெளியிடவில்லை. இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். தனது நிச்சயதார்த்தம் குறித்த படங்களுடன் செய்தி ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“என் உலகம் முழுவதையும் அர்த்தமுள்ளதாக்கும் மனிதரின் மீது இதைவிடக் காதலுடன் இருக்க முடியாது. என் அனைத்து பிரார்த்தனைகளின் பலனாய் வந்தவர் இவர்தான். இப்போது நிரந்தரமாக எனக்கானவர் ஆகிறார். மோதிரத்தால் எங்களை நாங்கள் பத்திரமாகப் பூட்டு போட்டுக்கொண்டோம். அவர் யார் என்பதைக் காணும் வரை காத்திருங்கள். ஆனால் அதுவரை நான் சொல்ல விரும்புவது அவர் மிகப் பொருத்தமானவர் என்பதே. வெளிச்சத்தின் கீழ் வாழும் வாழ்க்கையில், மனமுடைதல் என்பது கொஞ்சம் ஆபத்தானதுதான். ஆனால் நான் இன்று உணர்ந்ததைப் போல் இவ்வளவு தயாராக உணர்ந்ததில்லை. இரைச்சல் நிறைந்த என் உலகத்தில், மௌனமான சம்மதம் நீ. நான் பலவீனமாய் இருந்தபோது என்னைப் பார்த்து, பலமாகும் வரை என்னைக் காதலித்தவன் நீ. இது வாக்கு அல்ல, சபதம். தேர்ந்தெடுக்கப்படுவதில் இருந்து என்னை நான் விடுவித்துக் கொண்டு, முழு வாழ்க்கைக்கான அர்ப்பணிப்புக்குத் தயாராக உள்ளேன். நாங்கள் எங்களுக்கென அதிகாரப்பூர்வ சரணாலயம் ஒன்றைக் கட்டத் தொடங்கியிருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Bigg Boss celebrity Julie has become the talk of the town after her engagement pictures were released.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in