ரஞ்சித் முகத்துக்கு நேராக விமர்சனம் வைத்த விஜய் சேதுபதி!

‘கவுண்டம்பாளையம்’ படத்தால் எழுந்த சர்ச்சை குறித்து நீங்கள் பேசும்போது, வித்தியாசமான ரஞ்சித்தை என்னால் பார்க்க முடிந்தது.
ரஞ்சித் முகத்துக்கு நேராக விமர்சனம் வைத்த விஜய் சேதுபதி!
1 min read

பிக் பாஸ் 8-ன் முதல் நாளில், விஜய் சேதுபதி ரஞ்சித்தை விமர்சித்தது பேசுபொருளாக மாறியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ், 18 போட்டியாளர்களுடன் நேற்று (அக். 6) தொடங்கியது. இதுவரை 7 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த வருடம் அவர் விலகியதையடுத்து, விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இதில் கலந்துகொண்ட ரஞ்சித்தை அறிமுகம் செய்தபோது அவரின் முகத்துக்கு நேராக விமர்சனம் வைத்தார் விஜய் சேதுபதி.

ரஞ்சித்தை அறிமுகம் செய்த பிறகு பேசிய விஜய் சேதுபதி, சிந்துநதி பூ, பசுபதி, பீஷ்மர் போன்ற படங்களில் நான் பார்த்த ரஞ்சித்துடன் ஒப்பிடும் போது, உங்களிடம் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்ததாக நான் பார்க்கிறேன். ‘கவுண்டம்பாளையம்’ படத்தால் எழுந்த சர்ச்சை குறித்து நீங்கள் பேசும்போது, வித்தியாசமான ரஞ்சித்தை என்னால் பார்க்க முடிந்தது. சிந்துநதி பூ படத்தில் பார்க்கும்போது ஒரு நம்பிக்கைக்குரிய முகமாக, உங்களின் முகம் தெரிந்தது. ஆனால், அந்த முகத்தை கவுண்டம்பாளையம் படத்துக்கு பிறகு பேசிய ரஞ்சித்திடம் நான் பார்க்கவில்லை. ஒருவேளை மாற்றம் நிகழ்ந்ததா? இல்லை அது தான் உங்கள் இயல்பா? போன்ற கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ரஞ்சித், “நீங்கள் எப்போதும் பார்க்கும் அந்த அன்பான ரஞ்சித்தைப் போல தான் இப்போதும் இருக்கிறேன். நாம் எதை விதைக்கிறோமோ அதுவே முளைக்கும். ஆனால் நான் விதைத்ததை வைத்து ஒரு பாடமும் கற்றுக்கொண்டேன். அதனால் மிகவும் வருத்தப்பட்டேன். வெற்றி, தோல்வி, பொருளாதாரம் ஆகியவற்றைத் தாண்டி 4 நல்ல மனிதர்களை சம்பாதிப்பது கடினம். எனவே இந்த பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு உண்மையான நபராக இருப்பேன்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, ரஞ்சித் இயக்கி நடித்த கவுண்டம்பாளையம் படம் தொடர்பாக நிறைய சர்ச்சைகள் எழுந்த நிலையில் அது குறித்து ரஞ்சித்தின் முகத்துக்கு நேராக விஜய் சேதுபதி விமர்சனம் வைத்தது பேசுபொருளாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in