பிக் பாஸ் நடிகை காலமானார்!

2002-ல் Kaanta Laga என்கிற பாடலில் இடம்பெற்று புகழை அடைந்தார் ஷெஃபாலி.
பிக் பாஸ் நடிகை காலமானார்!
படம்: https://www.instagram.com/shefalijariwala
1 min read

ஹிந்தி பிக் பாஸில் பங்கேற்ற நடிகை ஷெஃபாலி ஜரிவாலா, மும்பையில் காலமானார். அவருக்கு வயது 42.

நேற்றிரவு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். எனினும் செல்லும் வழியிலேயே ஷெஃபாலி உயிரிழந்தார். இதையடுத்து ஷெஃபாலியுடனான நினைவுகளை நடிகர், நடிகைகள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

2002-ல் Kaanta Laga என்கிற பாடலில் இடம்பெற்று புகழை அடைந்தார் ஷெஃபாலி. வலிப்பு நோய் காரணமாக மிகக்குறைவான படங்களில் நடித்த ஷெஃபாலி சில இசை வீடியோக்களிலும் இடம்பெற்றார். இசைக்கலைஞர் ஹர்மீத் சிங்குடனான விவாகரத்துக்குப் பிறகு 2014-ல் நடிகர் பராக் தியாகியை ஷெஃபாலி திருமணம் செய்துகொண்டார். பிறகு 2019-ல் ஹிந்தி பிக் பாஸ் 13-ம் பருவத்தில் பங்கேற்று ரசிகர்களிடையே மேலும் புகழ் பெற்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in