பிக் பாஸ் 8-ல் பங்கேற்கும் போட்டியாளர்களின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
2017 முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை முதல் சீசனிலிருந்து 7-வது சீசன் வரை தொகுத்து வழங்கினார் கமல். கொரோனா தொற்று காலத்தில் சில வாரங்களுக்கு ரம்யா கிருஷ்ணன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இடையில் 24 மணி நேரம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் மூன்று பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருவதால் பிக் பாஸ் 8-ல் இருந்து விலகுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் கமல் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இதன் தொடர்ச்சியாக பிக் பாஸ் 8-ஐ விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
பிக் பாஸ் 8 நிகழ்ச்சி நாளை (அக்.6) தொடங்கவுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் போட்டியாளர்களர்களின் தகவல்கள் கசிந்துள்ளன.
பிக் பாஸ் 8-ல் பங்கேற்பதாக எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள்
1) ராப் பாடகர் பால் டப்பா
2) சீரியல் நடிகர் வி.ஜே. விஷால்
3) தொகுப்பாளர் ஜாக்குலின்
4) நடிகை அன்ஷிதா
5) மாடல் சௌந்தர்யா நஞ்சுண்டன்
6) சின்னத்திரை பிரபலம் ஷாலின் சோயா
7) நடிகை தர்ஷா குப்தா
8) நடிகை சஞ்சனா
9) நடிகை சுனிதா
10) சீரியல் நடிகர் அர்னவ்
11) சீரியல் நடிகர் அருண்
12) நடிகர் சந்தோஷ் பிரதாப்
13) நடிகர் கோகுல்நாத்
14) தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்
15) நடிகர் தீபக்
16) நடிகர் ரஞ்சித்
17) நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன்
18) சீரியல் நடிகை பவித்ரா ஜனனி