
பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் 5-வது வாரத்தில் நடிகை சுனிதா வெளியேறியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ், 18 போட்டியாளர்களுடன் அக். 6 அன்று தொடங்கியது. இதுவரை 7 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த வருடம் அவர் விலகியதையடுத்து, விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
இதுவரை தயாரிப்பாளர் ஃபேட்மேன் ரவிந்தர், நடிகர் அர்னவ், நடிகை தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறிய நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை.
இந்நிலையில் 5-வது வாரத்தில் நடிகை சுனிதா வெளியேறியுள்ளார்.
வாக்குகளின் அடிப்படையில் சாச்சனா, ஆனந்தி, சுனிதா ஆகிய மூன்று போட்டியாளர்களும் குறைவான வாக்குகள் பெற்றிருந்தார்கள். அதில், எதிர்பாராத வகையில் சுனிதா வெளியேறியுள்ளார்.