நடிகர் மனோஜ் பாரதி மாரடைப்பால் காலமானார்

நடிகர் மனோஜ் பாரதி மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் மனோஜ் பாரதி மாரடைப்பால் காலமானார்
1 min read

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48.

தனது தந்தை பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார் மனோஜ். சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் போன்ற படங்களிலும் அவர் நடித்தார். 2023-ல் மார்கழித் திங்கள் என்கிற படத்தையும் இயக்கியிருந்தார். 2022-ல் வெளிவந்த ‘விருமன்’ படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

நடிகை நந்தனாவைக் காதலித்து திருமணம் கொண்ட மனோஜுக்கு இரு மகள்கள் உண்டு.

உடல்நலம் பாதிக்கப்பட்ட மனோஜுக்குச் சமீபத்தில் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மனோஜ் மாரடைப்பால் இன்று காலமானார்.

நடிகர் மனோஜ் பாரதியின் மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in