மேடையில் அஞ்சலியைத் தள்ளி விட்ட பாலகிருஷ்ணா!: அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

"ரசிகர்கள் பலரும் பாலகிருஷ்ணாவின் செயலை விமர்சித்து வருகின்றனர்".
பாலகிருஷ்ணா
பாலகிருஷ்ணா
1 min read

நடிகர் பாலகிருஷ்ணா நடிகை அஞ்சலியை மேடையில் தள்ளி விட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கேங்ஸ் ஆஃப் கோதாவரி என்கிற படத்தின் நிகழ்ச்சி ஒன்று நேற்று ஹைதராபாதில் நடைபெற்றது. இதில் நடிகர் பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிலையில் இப்படத்தில் நடித்த அஞ்சலி, நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் சக நடிகர்கள் ஆகியோர் மேடையில் நின்று கொண்டிருந்தபோது அஞ்சலியை சற்று தள்ளி நிக்குமாறு பாலகிருஷ்ணா சைகை செய்தார்.

இதைத் தொடர்ந்து அஞ்சலி நகர, அஞ்சலியை கையால் சற்று பலமாகத் தள்ளினார் பாலகிருஷ்ணா. அப்படி செய்ததும் அஞ்சலி மற்றும் மேடையில் இருந்த மற்ற நடிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் தள்ளியதும் கீழே விழுவது போல சற்று தடுமாறினாலும், அதன் பிறகு சரியாக நின்று சிரிக்கத் தொடங்கினார் அஞ்சலி.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் பாலகிருஷ்ணாவின் செயலை விமர்சித்து வருகின்றனர்.

logo
Kizhakku News
kizhakkunews.in