கோட் படத்தில் தான் பணியாற்றி உள்ளதாக சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள தி கோட் (தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படம் வரும் செப்டம்பர் 5-ல் வெளியாக உள்ளது.
இப்படத்தில் பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி, மோகன், பிரபுதேவா, ஜெயராம், விடிவி கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா போன்ற பலரும் நடித்துள்ளனர். இசை - யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பு - ஏஜிஎஸ் நிறுவனம். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆகஸ்ட் 17 அன்று வெளியானது.
இந்நிலையில் கோட் படத்தில் தான் பணியாற்றி உள்ளதாகவும், முதல்முறையாக ஒரு படத்தில் வேலை செய்தது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
டப்பிங் பேசும் புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் பத்ரிநாத். கோட் படத்தின் டிரைலரில் விளையாட்டு மைதானம் ஒன்றில் விஜய் வரக்கூடிய காட்சிகள் இடம்பெற்றன.
எனவே, கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் பத்ரிநாத் அந்த காட்சிகளில் வர்ணனையாளராக நடித்திருப்பார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.