
தி ஃபென்டாஸ்டிக் ஃபோர் படத்துடன் அவதார் மூன்றாம் பாகத்தின் டிரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்வெலின் தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ் (The Fantastic Four: First Steps) படம் வரும் வெள்ளியன்று வெளியாகிறது. இப்படத்தின் வெளியீட்டுக்காகக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும் விதமாகப் புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ் படம் வெளியாகும்போது, இப்படத்துடன் ஜேம்ஸ் கேமரூனின் அவதார்: ஃபையர் அண்ட் ஆஷ் (Avatar: Fire and Ash) படத்தின் டிரெய்லர் இணைக்கப்பட்டு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவதார் படத்துக்கான அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவதார் படத்தின் மூன்றாம் பாகமாக இது, பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது. இப்படம் டிசம்பர் 19 அன்று உலகம் முழுக்க வெளியாகிறது.
எனினும், இந்தியாவில் வெளியாகும் ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ் படத்துடன் அவதார் டிரெய்லர் இணைக்கப்படுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜேம்ஸ் கேமரூனின் அவதார் முதல் பாகம் 2009-ல் வெளியானது. இதன் இரண்டாம் பாகமான அவதார்: தி வே ஆஃப் வாட்டர் (Avatar: The Way of Water) 2022-ல் வெளியானது. இவ்விரு படங்களும் ஒட்டுமொத்தமாக உலகளவில் பல ஆயிரம் கோடி வசூலை அள்ளிக் குவித்துள்ளன.
டிசம்பர் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகும் அவதார் மூன்றாம் பாகம், இந்தியாவில் மட்டும் 6 மொழிகளில் வெளியாகிறது. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. அவதார் படத்தின் முதலிரு பாகங்களுக்கு இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.
The Fantastic Four: First Steps | Avatar: The Way of Water | Trailer | Avatar Trailer | Avatar 3 | James Cameron | Avatar: Fire and Ash | Avatar: Fire and Ash Trailer