ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 3: முதல் பாகத்தை விஞ்சிய வசூல் | Avatar 3 |

டிஸ்னி தயாரித்த ஸூடோபியா 2, பார்பி, மோனா 2 படங்களை விட வசூல் குறைவு...
ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 3: முதல் பாகத்தை விஞ்சிய வசூல்
ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 3: முதல் பாகத்தை விஞ்சிய வசூல்
1 min read

ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் மூன்றாம் பாகம் முதல் வார இறுதியில் உலகளவில் 345 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலைக் குவித்துள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அவதார் படத்தின் மூன்றாவது பாகமான அவதார் ஆஷ் அண்ட் ஃபயர் கடந்த 19 அன்று வெளியானது. அவதாரின் முதல் பாகம் 2009-ல் வெளியாகி உலகம் முழுவதும் பெரிய வரவேற்பு கிடைத்தது. முதல் வாரத்தில் இப்படம் 241 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதைத் தொடர்ந்து இப்படத்தை ஐந்து பாகங்களாக இயக்கத் திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்தார். தொடர்ந்து 2022-ல் இரண்டாம் பாகத்தையும் வெளியிட்டார்.

அவதார் வே ஆஃப் வாட்டர் என்று தலைப்பிடப்பட்ட அந்தப் படம், முதல் வாரத்திலேயே 435 மில்லியன் அமெரிக்க டாலரை வசூலித்து பிரமாண்ட ஹிட் கொடுத்தது. முதல் பாகம் கொடுத்திருந்த எதிர்பார்ப்பின் காரணமாக இரண்டாம் பாகத்தின் வசூல் உயர்ந்தது.

இதைத் தொடர்ந்து அவதார் மூன்றாம் பாகமான ஆஷ் அண்ட் ஃபயர் வெளியானது. இதற்கு, தற்போது உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் வாரத்தில் இப்படம் 345 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்துள்ளது. இது முதல் பாகமான அவதாரை விடவும் அதிகம் என்றாலும் இரண்டாவது பாகத்தை விடக் குறைவு. மேலும் உலகப் புகழ்பெற்ற டிஸ்னியின் மற்ற வெளியீடுகளான ஸூடோபியா 2 (497.20 மில்லியன்) பார்பி (356 மில்லியன்) மோனா 2 (389 மில்லியன்) ஆகிய படங்களை விடவும் குறைவான வசூலை எட்டியிருக்கிறது அவதார் 3.

ஜேம்ஸ் கேமரூனின் படங்கள் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதாலேயே உலகம் முழுவதிலும் ரசிகர்களைக் கொண்டுள்ளண. அவதார் பாகம் மூன்றிலும் நவீன தொழில்நுட்பங்களை அவர் பயன்படுத்தியிருக்கிறார். அதற்கான முறையான உபகரணங்களுடன் படத்தைத் திரையிட வேண்டும் என்று உலக திரையரங்குகளுக்குக் கடிதம் ஒன்றையும் அவர் எழுதினார். ஆனால், கதைகளத்தில் பெரிய மாற்றம் இல்லாதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தளவில் முதல் வார இறுதியில் ரூ. 66 கோடி வசூலித்துள்ளது. இதுவும் அவதார் பாகம் இரண்டின் (ரூ. 128 கோடி) வசூலை விடவும் குறைவானதாகப் பதிவாகியுள்ளது.

Summary

Hollywood director James Cameron's Avatar 3 has grossed $345 million worldwide in its first weekend.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in