அனைவருக்கும் பொறுப்புணர்வு இருந்தால் மட்டுமே பாலியல் தொல்லை போன்ற பிரச்னைகளைக் குறைக்க முடியும் என்று நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
கன்னட நடிகர் துருவா சர்ஜா நடிக்கும் மார்டின் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் கதையை அர்ஜுன் எழுதியுள்ளார்.
இந்நிலையில் இதில் கலந்துகொண்ட அர்ஜுனிடம் மலையாளத் திரையுலகில் எழுந்துள்ள பாலியல் புகார்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “ஒருவரால் மட்டும் இவை அனைத்தையும் நிறுத்த முடியாது. அனைவருக்கும் பொறுப்புணர்வு வேண்டும். நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் எங்காவது ஒரு பிரச்னை நடந்துக் கொண்டிருக்கும். எல்லா இடங்களுக்கும் சென்று அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க முடியாது. எனவே அனைவருக்கும் பொறுப்புணர்வு வேண்டும். அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பிரச்னை இருக்கிறது. எல்லா இடங்களிலும் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களும் இருப்பார்கள். எனவே அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளைக் குறைக்க முடியும்” என்றார்.