ரஹ்மான் மணமுறிவில் மோஹினி டேவுக்குத் தொடர்பா?: வழக்கறிஞர் விளக்கம்

29 வருட திருமண வாழ்க்கையில் கருத்துவேறுபாடுகளும் இடைவெளியும் உண்டானதால் பிரிவதாக ரஹ்மானும் அவருடைய மனைவி சாய்ரா பானுவும் அறிவித்தார்கள்.
ரஹ்மான் மணமுறிவில் 
மோஹினி டேவுக்குத் தொடர்பா?: 
வழக்கறிஞர் விளக்கம்
ANI
1 min read

இதுவரை எந்தவொரு சர்ச்சையிலும் அடிபடாத ஏ.ஆர். ரஹ்மான், மனைவியைப் பிரிவதாக அறிவித்த நொடி முதல் ரசிகர்களின் பேசுபொருளாக மாறியுள்ளார்.

29 வருட திருமண வாழ்க்கையில் கருத்துவேறுபாடுகளும் இடைவெளியும் உண்டானதால் பிரிவதாக ரஹ்மானும் அவருடைய மனைவி சாய்ரா பானுவும் அறிவித்தார்கள். இத்தகவல் ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ரஹ்மான் இசைக்குழுவில் உள்ள மோஹினி டே, தன்னுடைய கணவரைப் பிரிவதாக அறிவித்தது மேலும் குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.

மோஹினி டே தன்னுடைய முடிவை அறிவித்த சில மணி நேரங்கள் கழித்து ரஹ்மானின் மனைவி, மணமுறிவை அறிவித்தார். அடுத்ததாக ரஹ்மானும் இதை உறுதி செய்தார். பிறகு ரஹ்மானின் குழந்தைகளும் தங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்.

ஒரே நாளில் இவை அனைத்தும் நடைபெற்றதால் ரஹ்மானின் மணமுறிவுக்கும் மோஹினி டே, தன்னுடைய கணவரைப் பிரிவதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. எனினும் ரசிகர்களின் இந்தக் குழப்பத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார் சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா.

ரிபப்ளிக் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் வந்தனா கூறியதாவது: ரஹ்மானின் விவாகரத்துக்கும் மோஹினி டே தன்னுடைய கணவரைப் பிரிந்ததற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ரஹ்மானும் சாய்ராவும் இம்முடிவைச் சொந்தமாக எடுத்தார்கள் என்றார். மேலும் விவாகரத்து காரணமாக இருவருக்கும் இடையில் ஜீவனாம்சம் குறித்து எவ்விதப் பேச்சும் எழவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். இன்னும் அந்த நிலைமைக்குப் பிரச்னை செல்லவில்லை. இருவரும் சம்மதத்துடனே விவாகரத்து கோரியுள்ளார்கள். இந்த முடிவை இருவரும் சாதாரணமாக எடுக்கவில்லை என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in