30-வது ஆண்டு திருமண வாழ்வை எட்டும் நிலையில்..: ஏ.ஆர். ரஹ்மான் உருக்கம்

இந்த சிதறலால் உடைந்த துண்டுகள் தங்களின் இடத்தை மீண்டும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் கூட, நாங்கள் அதற்கான அர்த்தத்தை தேடுகிறோம்.
ஏ.ஆர். ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான்ANI
1 min read

30-வது ஆண்டு திருமண வாழ்வை எட்டுவோம் என எதிர்பார்த்த நிலையில் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளதாக ஏ.ஆர். ரஹ்மான் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானைப் பிரிவதாக அவருடைய மனைவி சாய்ரா பானு அறிவித்ததைத் தொடர்ந்து, இருவருடைய 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து ஏ.ஆர். ரஹ்மான் தனது எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மானின் எக்ஸ் பதிவு

“30-வது ஆண்டு திருமண வாழ்வை எட்டுவோம் என எதிர்பார்த்த நிலையில் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளது. உடைந்த இதயங்களின் கனத்தில் கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்கக் கூடும். இந்த சிதறலால் உடைந்த துண்டுகள் தங்களின் இடத்தை மீண்டும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் கூட, நாங்கள் அதற்கான அர்த்தத்தை தேடுகிறோம். இந்த தருணத்தில் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்த நண்பர்களுக்கு நன்றி”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in