‘காந்தி’ இணையத் தொடருக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல எழுத்தாளர் ராமச்சந்திர குஹா எழுதிய காந்தி பற்றிய புத்தகங்கள் இணையத் தொடராக இயக்கப்பட்டு வருகிறது.
ஹன்சல் மேத்தா இயக்கும் இந்த இணையத் தொடரில் காந்தி கதாபாத்திரத்தில் பிரதிக் காந்தி நடிக்கிறார். தயாரிப்பு - அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட்.
இந்நிலையில் ‘காந்தி’ இணையத் தொடருக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (அக்.2) தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் அன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட்.