இளையராஜாவைப் பார்த்து வளர்ந்த கலைஞன் நான்: ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட காணொளி | AR Rahman | Ilaiyaraaja |

இளையராஜாவின் சிம்பொனி சாதனை, ஒவ்வொரு இசைக் கலைஞருக்கும் இசைத்துறையில் புதுமை செய்ய ஊக்கமளிக்கிறது...
இளையராஜாவைப் பார்த்து வளர்ந்த கலைஞன் நான்: ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட காணொளி | AR Rahman | Ilaiyaraaja |
1 min read

சிம்பொனி இசையமைத்த இளையராஜாவுக்குத் தமிழக அரசு நேற்று பாராட்டு விழா நடத்தியதை முன்னிட்டு ஏ.ஆர். ரஹ்மான் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

வணக்கம். இசையுலகில் தமிழுக்கும் தமிழருக்கும் மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கே தனி பெருமையைத் தேடி தந்தவர் இசைஞானி அவர்கள். இமாலயச் சாதனையும் எளிமையும் ஒருங்கமைந்த மாமனிதரும் ஆவார்.

சாஸ்திரிய சங்கீதம், மேற்கத்திய செவ்வியல் இசை, மக்கள் இசை இவற்றுக்கிடையே நிலவிய வேறுபாடுகளைத் தனது இசையின் வழியே ஒன்றாக்கிய இசைமேதை. குறிப்பாக திரையிசையைக் கடந்து முழுமையான மேற்கத்திய செவ்வியல் இசையில் அவர் நிகழ்த்தி இருக்கும் சிம்பொனி என்ற சாதனை, ஒவ்வொரு இசைக் கலைஞருக்கும் இசைத்துறையில் புதுமை செய்ய ஊக்கமளிக்கக்கூடிய சாதனையாக இருக்கிறது.

அவரைப் பார்த்து வளர்ந்த கலைஞன் என்பதில் எப்போதும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டு. இந்தக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக் கொள்வதில் உங்களைப் போலவே நானும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

இசைஞானி இளையராஜா அவர்கள் பொன்விழா ஆண்டைத் தமிழ்நாடு அரசே ஒருங்கமைத்துக் கொண்டாடுவதை இளையராஜா அவர்களுக்கு மட்டுமான விழாவாக அல்லாமல் ஒட்டுமொத்த இசைக் கலைஞர்களுக்கான அங்கீகாரமாகப் பார்க்கிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in