அதிக தேசிய விருது: முதலிடத்தில் ஏ.ஆர். ரஹ்மான்!

இதுவரை ஏ.ஆர். ரஹ்மான் 7 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
 ஏ.ஆர். ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான்
1 min read

அதிக தேசிய விருதுகளை வென்ற இந்திய இசையமைப்பாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

2022-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் நேற்று (ஆகஸ்ட் 16) அறிவிக்கப்பட்டன.

இதில், பொன்னியின் செல்வன் 1 படத்துக்கு 4 விருதுகளும், திருச்சிற்றம்பலம் படத்துக்கு 2 விருதுகளும் எனத் தமிழ்த் திரையுலகுக்கு மொத்தம் 6 விருதுகள் கிடைத்தன.

சிறந்த பின்னணி இசைக்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு விருது அறிவிக்கப்பட்டது.

இந்த விருதுடன் சேர்த்து இதுவரை ஏ.ஆர். ரஹ்மான் 7 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

இதன் மூலம் அதிக தேசிய விருதுகளை வென்ற இந்திய இசையமைப்பாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ரஹ்மான்.

இந்தப் பட்டியலில் இளையராஜா 5 தேசிய விருதுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். விஷால் பரத்வாஜ் 3 விருதுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

தமிழ் இசையமைப்பாளர்களில் கே.வி. மகாதேவன் 2 தேசிய விருதுகளும், லால்குடி ஜெயராமன், வித்யாசாகர், ஜி.வி. பிரகாஷ், டி. இமான், தமன், தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் தலா ஒரு தேசிய விருதையும் வென்றனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in