டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி: ஏ.ஆர். ரஹ்மான் அர்ப்பணித்த பாடல்!

13 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை வென்று ரசிகர்களின் நீண்ட கால ஏக்கத்தை போற்றியது இந்திய அணி.
ஏ.ஆர். ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான்@arrahman

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாடல் ஒன்றை அர்ப்பணித்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பார்படாஸில் கடந்த ஜூன் 29 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.

17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையும், 13 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையையும் வென்று ரசிகர்களின் நீண்ட கால ஏக்கத்தை போற்றியது. இந்நிலையில் இந்திய அணிக்கு ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது இசையில் வெளிவந்த ‘மைதான்’ படத்தில் இடம்பெற்ற ‘டீம் இந்தியா ஹே ஹம் (Team India Hai Hum)’ என்ற பாடலை தனது இசைக் குழுவினருடன் இணைந்து பாடிய காணொளி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in