ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’

இப்படம் 2025-ம் ஆண்டு ரம்ஜான் பண்டிகை அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’
@ARMurugadoss
1 min read

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் படத்துக்கு ‘சிக்கந்தர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார், தர்பார் போன்ற பல படங்களை இயக்கியவர் ஏ.ஆர். முருகதாஸ்.

‘தர்பார்’ படத்துக்குப் பிறகு அவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ஹிந்திப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

இப்படத்துக்கு 'சிக்கந்தர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும், ‘சிக்கந்தர்’ படம் 2025-ம் ஆண்டு ரம்ஜான் பண்டிகை அன்று வெளியாகும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in