பீஸ்ட் பட நடிகைக்கு மலையாள நடிகருடன் திருமணம்?

அந்த வீடியோ, திரைப்படத்துக்கான விளம்பரமாகவும் இருக்கலாம் எனச் சிலர் சந்தேகிப்பதால் இதுகுறித்த குழப்பம் நிலவுகிறது.
பீஸ்ட் பட நடிகைக்கு மலையாள நடிகருடன் திருமணம்?
படம் - https://www.instagram.com/aparna.das1/
1 min read

பீஸ்ட், டாடா போன்ற தமிழ்ப் படங்களில் நடித்த அபர்ணா தாஸுக்கு வரும் ஏப்ரல் 24 அன்று திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மஞ்ஞும்மல் பாய்ஸ் படத்தில் நடித்த தீபக்கை கேரளத்தின் வடக்கன்சேரியில் அபர்ணா தாஸ் திருமணம் செய்யவுள்ளார். 2019-ல் வெளியான மனோகரம் என்கிற மலையாளப் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தார்கள். தீபக் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இத்தகவலை உறுதி செய்வது போல் உள்ளது. மேலும் இருவரின் பெயர்களைக் கொண்ட திருமணப் பத்திரிகை ஒன்று சமூகவலைத்தளங்களில் வலம் வருகிறது. எனினும் தீபக் வெளியிட்டுள்ள வீடியோ, திரைப்படத்துக்கான விளம்பரமாகவும் இருக்கலாம் எனச் சிலர் சந்தேகிப்பதால் இதுகுறித்த குழப்பம் நிலவுகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in