கேரளத்தில் நடைபெற்ற அபர்ணா தாஸ் - தீபக் திருமணம்
கேரளத்தில் நடைபெற்ற அபர்ணா தாஸ் - தீபக் திருமணம்@aparna.das1

கேரளத்தில் நடைபெற்ற அபர்ணா தாஸ் - தீபக் திருமணம்

2019-ல் வெளியான மனோகரம் என்கிற மலையாளப் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தார்கள்.

நடிகை அபர்ணா தாஸ் மற்றும் மலையாள நடிகர் தீபக் பரம்போல் ஜோடிக்கு இன்று திருமணம் நடைபெற்றது.

பீஸ்ட், டாடா போன்ற தமிழ்ப் படங்களில் நடித்த அபர்ணா தாஸ், சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மஞ்ஞும்மல் பாய்ஸ் படத்தில் நடித்த தீபக்கை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. 2019-ல் வெளியான மனோகரம் என்கிற மலையாளப் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தார்கள்.

இந்நிலையில் அபர்ணா தாஸ் - தீபகின் திருமணம் இன்று கேரளத்தில் நடைபெற்றது.

கேரள மாநிலம் குருவாயூரிலுள்ள குருவாயூரப்பன் கோயிலில் நடைபெற்ற திருமணத்தில், இருவரது குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

திருமண புகைப்படங்களை அபர்ணா தாஸ் தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in