.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
அந்தகன் படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் வெளியிடப்போவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
2018-ல் வெளியான அந்தாதுன் படத்தின் உரிமையை வாங்கி தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ள படம் அந்தகன். இப்படத்தை நடிகர் பிரசாந்தின் தந்தையும், பிரபல நடிகர் - இயக்குநரான தியாகராஜன் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், சமுத்திரகனி, யோகி பாபு, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், ஊர்வசி, வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு - ரவி யாதவ்.
இப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது.
அந்தகன் படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை அனிருத் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் ஜூலை 24 அன்று வெளியாக உள்ளது.