அந்தகன் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

2018-ல் வெளியான அந்தாதுன் படத்தின் உரிமையை வாங்கி தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ள படம் அந்தகன்.
அந்தகன் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
அந்தகன் வெளியீட்டு தேதி அறிவிப்பு!@actorprashanth
1 min read

பிரசாந்த் நடிப்பில் நீண்ட நாள்களாக உருவாகி வரும் அந்தகன் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

2018-ல் வெளியான அந்தாதுன் படத்தின் உரிமையை வாங்கி தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ள படம் அந்தகன். இப்படத்தை நடிகர் பிரசாந்தின் தந்தையும், பிரபல நடிகர் - இயக்குநரான தியாகராஜன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், சமுத்திரகனி, யோகி பாபு, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், ஊர்வசி, வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு - ரவி யாதவ்.

பல வருடங்களாக தயாரிப்பில் இருந்து வந்த இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் இப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே தினத்தில் தான் இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படமும் வெளியாக உள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in