கவின் படத்தில் இருந்து அனிருத் விலகல்?

ப்ளடி பெக்கர், டாடா ஆகிய படங்களின் இசையமைப்பாளர் ஜென் மார்டின், ‘கிஸ்’ படத்துக்கு இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
கவின் படத்தில் இருந்து அனிருத் விலகல்?
@dancersatz
1 min read

கவின் நடிக்கும் ‘கிஸ்’ படத்தில் இருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’. லிப்ட், டாடா, ஸ்டார், ப்ளடி பெக்கர் போன்ற படங்களில் நடித்த கவின் இப்படத்தில் நடிக்கிறார்.

ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது ‘கிஸ்’ படத்தில் இருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கவின் நடித்த ப்ளடி பெக்கர், டாடா ஆகிய படங்களின் இசையமைப்பாளர் ஜென் மார்டின், ‘கிஸ்’ படத்துக்கு இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in